தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாது விட்டது மாபெரும் தவறு – அமைச்சர் சரத் வீரசேகர

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாது விட்டது தவறு என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.


உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த போது அவர்களின் அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


அவ்வாறு தடை செய்யாத காரணத்தினால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவிணைவாத கருத்துக்களை நாடாளுமன்றில் முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.


தொடர்ச்சியாக இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் இருப்பதற்கு தகுதியற்றது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.