புரவியை எதிர்கொள்ள வவுனியா நகரசபை தயார் நிலையில்; நகர சபை தலைவர் தெரிவிப்பு..!

0

புயலினால் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நகரசபை ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் தலைவர் இ. கௌதமன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புரவி புயலானது வவுனியாவிலும் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளமையினால் நகரசபை அவசர கால செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராக உள்ளது.


தீயணைப்பு பிரிவு, நோயாளர் காவு வண்டி, நகரசபை தொழிலாளர்கள் என அனைத்து பிரிவும் தயார் நிலையில் உள்ளது.


மக்கள் தமது பகுதிகளில் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் விசேட இலக்கமான 024-2225555 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு எமது உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.