வவுனியாவில் மீண்டும் மாகா நிறுவன பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

0

வவுனியா நெடுங்கேணியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி பணிகளில் பணியாற்றியவர்கள் சிலர் கொரோனா தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார பிரிவினரின் கடும் பிரயத்தனம் மற்றும் அர்ப்பணிப்பான சேவையினூடாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.


இந்நிலையில் மீண்டும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.