வவுனியா பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு..!

0

மீட்டரான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் முச்சக்கர வண்டிகளில் ஒட்டும் செயற்பாடு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இடம் பெற்ற “மீட்டரான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டது.


சமூகத்தில் நாள்தோறும் வாடிக்கையாளர்கள் பலரை ஏற்றும் போதும் சமூக நடவடிக்கையின் போதும் எப்போதும் ஒரு மீட்டர் இடை வெளியினை கடைப்பிடிக்க முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு ஸ்ரிக்கர்கள் முச்சக்கர வண்டியில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.


இச்செயற்பாட்டில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்தன, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சுகாதார கல்வி அதிகாரி கேதீஸ்வரன் ஆகியோர் இணைந்து கொண்டிருந்தனர்.