வவுனியாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்கலன்கள் வழங்கி வைப்பு..!

0

வவுனியாவிலுள்ள கால் நடை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ஓமந்தை சமூக ஆர்வலரினால் தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு பத்து லீற்றர் பால் கொள்கலன்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாலமோட்டை கிராம அலுவலகர் பிரிவிலுள்ள கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் வசித்து வரும் கால் நடை உற்பத்தி தொழிலை மேற்கொள்ளும் பத்துக் குடும்ங்களுக்கு பால் கொள்வனவை எடுத்துச் செல்வததை இலகுபடுத்தும் நடவடிக்கையாக பத்து லீற்றர் பால் கொள்கலன்கள் நேற்று சமூக ஆர்வலர் ஆ . சுரேசினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.