மின்சார நிலுவை செலுத்தவில்லை; இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்..!

0

வவுனியா பழைய பேருந்து நிலையம் கடந்த சில தினங்களாக இருளில் மூழ்கி வருகின்றது . இதனால் பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.

மின்சார சபைக்குச் செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் செலுத்தப்படவில்லை இதனால் மின் துண்டிப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் மின்மானியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்மாற்றியும் சேதமடைந்துள்ளது .


இதனால் பேருந்து நிலையத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது இதனை உடனடியாக சீமைத்துத்தருமாறு அப்பகுதி வர்த்தகர்கள் கோருகின்றனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் நகரசபையினால் பொருத்தப்பட்டுள்ள பிரகாசமான மின் குமிழ்கள் சில தினங்கள் இரவில் ஒளிர்வதில்லை அப்பகுதி எங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது .


தற்போது காணப்படும் மழையுடனான காலை நிலையினால் நோகாலத்திற்குள் இருள் சூழ்ந்து கொள்கின்றது . எனவே இரவு வேளையில் வர்த்தக நிலையங்களைத்திறந்து வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை . இந்நிலையை உடனடியாக சீரமைத்துத்தருமாறு பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தகர்கள் கோரியுள்ளனர் .


இவ்விடம் குறித்து நகரசபையினருடன் தொடர்பு கொண்ட போது மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை உடனடியாக செயற்படுத்த முடியவில்லை . அத்துடன் மின்சாரசபைக்கு செலுத்தவேண்டிய நிலவைப் பணமும் செலுத்தப்படவில்லை இதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை நகரசபையினால் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


இவ்வியடம் குறித்து வர்த்தகர் சங்கத்தினருடன் தொடர்பு கொண்ட போது ,

வர்த்தகர்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது . இவ்விடயம் நகரசபையின் கவனத்திந்தக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் இணைந்து இதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.