தமிழர் விடுதலைக்காக உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் மக்கள் இதயங்களில் என்றும் வாழ்வார்..!

0

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பர்கள் எனத் தெரிவித்தார் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.


இன்றைய தினம் தமிழர் விடுதலை போராட்டத்தில் ஆகுதியாகிய மாவீரர்களுக்கு யாழில் உள்ள தனது வாசஸ் தலத்தில் அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.