யாழைச் சேர்ந்த ஆசிரியர் மன்னாரில் பாடசாலை வாசலில் கஞ்சாவுடன் கைது..!

0

மன்னாரில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழைச் சேர்ந்த இளம் ஆசிரியர் இன்று (26) பாடசாலை வாயிலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என மன்னார் பொலிசார் தெரிவித்தனர்.


மன்னார் பிரபல ஆண்கள் பாடசாலை நுழை வாயிலில் வைத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


மன்னார் 54வது படையணி இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, மன்னார் பொலிசாரின் உதவியுடன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான ஆசிரியரே இவ்வாறு கைதாகியுள்ளார்.


கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது பையில் சுமார் 500 மில்லி கிராம் கேரள கஞ்சா மூன்று சிறிய பொட்டலங்களாக சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.


கஞ்சாவை மாணவர்களிற்கு விநியோகிக்க ஆசிரியர் கொண்டு வந்தாரா அல்லது வேறு நோக்கத்திற்காக கொண்டு வந்தாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.