புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளன்று லங்கா பிறீமியர் லீக் போட்டிகள் ஆரம்பம்..!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளாகிய நவம்பர் 26ம் திகதி லங்கா பிறீமியர் லீக் – 2020 போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

 

யாழ், காலி, கொழும்பு, தம்புள்ள, கண்டி என ஐந்து பிரதேசங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அணிகள் களமிறங்கவுள்ளன. போட்டிகள் சூரியவெவ மைதானத்தில் நடைபெறவுள்ளன.அந்த வகையில் Jaffna Stallions அணிக்கு தலைவராக திசார பெரேரவும், Galle Gladiators அணிக்கு தலைவராக அப்ரிடியும், Colombo Kings அணிக்கு தலைவராக மத்யூஸ்சும், Dambulla Hawks அணிக்கு தலைவராக தசுன் சானகவும், kandy Tuskers அணிக்கு தலைவராக குஷால் பெரேராவும் தலைமை தாங்குகின்றனர்.மேலும் தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான மாதத்தில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதன் மறைமுக காரணங்களை எம்மவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வடக்கில் புட்டு கதையை ஆரம்பித்து ஒரு பக்கம் திசை திருப்பலைச் செய்தபடி, மறுபுறம் நினைவேந்தல் நிகழ்வுகளை நீதிமன்ற சட்டத்தின் ஊடாக தடைசெய்த படி இத்தகய திசை திருப்பல்கள் தொடர்கின்றன.