75வது அகவையில் பிரதமர் மஹிந்த; ஒருவருட பூர்த்தியில் ஜனாதிபதி கோட்டா..!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த தினம் (18) இன்றாகும். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெறவுள்ளன.

1945 நவம்பர் 18 ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ ஆளுமை மிக்கதொரு தலைவராவார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 1970 மே 27 அன்று பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு பெலியத்த தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 7, 1970 அன்று பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக பதவியேற்றார்.

மஹிந்த ராஜபக்ஷ 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், அன்றிலிருந்து 2015 வரை அவர் ஜனாதிபதியாக இருந்தார்.


2004 நவம்பர் 19 முதல் 2005 ஜனாதிபதித் தேர்தல் வரை, 26 ஒக்டோபர் 2018 முதல் 15 டிசம்பர் மற்றும் 2019 நவம்பர் 21 வரை இலங்கையின் பிரதமராகவும் இருந்துள்ளார்.

பெப்ரவரி 6 முதல் ஏப்ரல் 2 வரை இரண்டு சந்தர்ப்பங்களில், மீண்டும் 18 டிசம்பர் 2018 முதல் நவம்பர் 21 வரை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.


இதேவேளை இலங்­கையின் ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்று இன்றுடன் ஓராண்டுகள் பூர்த்தி ஆகியுள்ளன.

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிட்டு 52.25 சதவீத (6,924,255) வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.