நீங்கள் கொன்ற எங்கள் உறவினர்களை நினைவு கூற உங்களிடம் அனுமதி கேட்க வேண்டுமா?

0

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீர் துயிலும் இல்ல வளாகத்தில் சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற முற்பட்ட போது அவர் அதனை நிராகரித்து முரண்பட்டதாக தெரிய வருகிறது.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இன்று நண்பகல் 12 மணியளவில் கஜேந்திரன் MP தலைமையில் இளைஞர்கள் இணைந்து துயிலும் இல்ல வளாகத்தில் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்று கஜேந்திரனிடம் வாக்குமூலம் பெற முயன்றனர்.


அதன் போது, தன்னால் அந்த இடத்தில் வைத்து வாக்குமூலம் வழங்க முடியாது என்று தெரிவித்த கஜேந்திரன் தன்னை கைது செய்து கொண்டு செல்லுமாறும் பின்னர் வாக்குமூலம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு அவர் இதுதான் ஜனாதிபதி கோட்டபாயவின் ஜனநாயகமா? நீங்கள் கொன்ற எங்கள் உறவினர்களை நினைவு கூற உங்களிடம் அனுமதி பெற வேண்டுமா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


இதன் பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் வாக்கு மூலம் பெறவில்லை என்றும் தொடர்ந்துஅங்கு சிரமதானம் நடைபெற்றது எனவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.