எனது தாய் தந்தையரைப் போல் வைத்தியராகி பணியாற்றுவதே எனது இலக்கு..!

0

எனது தாய் தந்தையரைப் போல் வைத்தியராகி பணியாற்றுவதே எனது இலக்கு என வவுனியா மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி செல்வி ஜெயந்தன் அஸ்வின்யா தெரிவித்துள்ளார்.
தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் வவுனியா மாவட்டத்தில் 196 புள்ளிகளைப் பெற்று இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய மாணவி ஜெயந்தன் அஸ்வின்யா முதலிடம் பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து அம் மாணவி கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற பெருமை என்னை வழிகாட்டிய எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், எனது பெற்றோர், அம்மம்மா மற்றும் என்னை வழிகாட்டிய ஏனைய ஆசிரியர்களையே சாரும்.

கொரோனா விடுமுறைக் காலத்திலும் கடந்த கால வினாக்கள் மற்றும் பயிற்சிகளை நிறையவே செய்தேன். அந்த முயற்சிக்கு கிடைத்தே வெற்றியே இது. இதேபோல் மாணவர்கள் கடுமையாக பயிற்சிகளைச் செய்து முயற்சி செய்தால் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும்.
எனது தாய், தந்தையர் வைத்தியர். அவர்கள் வவுனியா வைத்திய சாலையில் பணியாற்றுகின்றனர். அவர்களைப் போல் வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என அந்த மாணவி மேலும் தெரிவித்தார்.