காடழிப்பு விவகாரம்; ரிசாட்டின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என அதிரடி தீர்ப்பு..!

0

வில்பத்து வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனினால் ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இந்த நிலையில் அங்கு அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக அவரது செலவில் புதிய மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் இந்த வழக்கிற்கான செலவினங்களையும் அவர் செலுத்த வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.