பொலிசாரின் ஏச்சால் மாணவன் எடுத்த விபரீத முடிவு; மாணவன் பலி..!

0

பிடிகல-பொரவகம பகுதியில் வசித்து வந்த 17 வயது பாடசாலை மாணவர் ஒருவர் அவரது வீட்டு பின்புறத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் கடந்த 11ஆம் திகதி இரவு தனது நண்பருடன் தல்கசவல பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது உந்துருளியை நிறுத்துமாறு பொலிசார் இவர்களுக்கு சைகை காட்டியுள்ளனர்.


எவ்வாறாயினும், பொலிசாரின் சமிக்ஞைகளை அலட்சியப் படுத்திவிட்டு இவர்கள் இருவரும் உந்துருளியில் பயணித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த உந்துருளியின் உரிமையாளரை பொலிசார் கண்டு பிடித்துள்ளதையடுத்து மேற்படி மாணவரையும் பொலிசார் அழைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


அத்தோடு மாணவரின் தாயும் அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்ததோடு குறித்த மாணவரை கடுமையாக திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அவமானம் மற்றும் பயமே குறித்த தற்கொலை சம்பவத்துக்கு காரணமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


தற்போது உயிரிழந்த மாணவரின் பிரேத பரிசோதனைகள் எல்பிடிய மருத்துமனையில் இடம் பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.