சற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 544 பேர் அடையாளம் காணப்பட்டனர்..!

0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 544 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 171 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,495ஆக அதிகரித்துள்ளது.