2021 ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டி வெளியாகியது..!

0

கொரோனாத்தொற்றின் காரணமாக இவவாண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக 2021இல் விடுமுறைககள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை இல 33/2020 இன்படி நாட்காட்டி சிங்களதமிழ் மற்றும் முஸ்ஸிம் பாடசாலைகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது.சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்

முதலாம் தவணை

( முதல் கட்டம்)

2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக் கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

(க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்)

( இரண்டாம் கட்டம்)

2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிறல் 09 வௌ்ளிக் கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)இரண்டாம் தவணை

2021 ஏப்பிரல் 19 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜுலை 30 வௌ்ளிக் கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

மூன்றாம் தவணை

2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம் 2021 டிசம்பர் 03 வௌ்ளிக் கிழமை வரை

முஸ்லிம்பாடசாலைகள்

முதலாம்தவணை:

(முதல் கட்டம்:)

2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக் கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

(க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்)

இரண்டாம் கட்டம்:

2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிரல் 09 வௌ்ளிக் கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

இரண்டாம் தவணை

2021 மே 17 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஆகஸ்ட் 25 புதன்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

(2021 ஆகஸ்ட் 26,27 இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படும்)

மூன்றாம் தவணை

2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம் 2021 டிசம்பர் 03 வௌ்ளிக் கிழமை வரை