நவம்பர் 13 தாக்குதல்; மெளனிக்கும் ஈஃபிள் கோபுரம்..!

0

நவம்பர் 13 தாக்குதலின் நினைவு நாளை நினைவு கோரும் வகையில் ஈஃபிள் கோபுரம் தனது விளக்குகளை அணைத்து இருளில் மூழ்க உள்ளது.


நாளை வெள்ளிக் கிழமை நவம்பர் 13 தாக்குதலின் ஐந்தாவது வருட நினைவு தினம். பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட கோர தாக்குதலில் 130 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 416 பேர் காயமடைதிருந்தனர்.


பிரான்ஸ் உட்பட ஒட்டு மொத்த உலகத்தையே அதிர்வுக்கு உள்ளாக்கியிருந்த இந்த தாக்குதல் இடம் பெற்று நாளையோடு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றது.


அதை நினைவுகோரும் வகையில், நாளை இரவு 8 மணியோடு ஈஃபிள் கோபுரம் தனது விளக்குகளை அணைத்து, இருளில் மூழ்கின்றது. இத்தகவலை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.