பிள்ளையானின் கட்சியின் செயலாளர் கொலை குற்றச்சாட்டில் அதிரடிக் கைது..!

0

பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் இன்றைய தினம் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பாடசாலை ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


இது தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட கொலைச் சந்தேக நபர் பூ.பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதேவேளை கட்சியின் தலைவர் பிள்ளையான் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அரச ஆதரவு “கெளரவ” பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.