25 வயது இளைஞனுடன் விடுதிக்கு சென்ற தமிழ் பெண்ணிற்கு நடந்த கொடூரம்..!

0

பொலன்னறுவை நகரத்திற்கு அருகிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து இன்று (12) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிசார் தெரிவித்தனர்.


எம்.எம்.கமலாரஞ்சினி (41) என்ற திருமணமான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நாவுல, லெனடோர, செருடண்டபொலவை வசிப்பிடமாக கொண்டவர்.


நேற்று இரவு இளைஞன் ஒருவருடன் விடுதிக்கு வந்துள்ளார். திகல்பிட்டிய, பாகமுனவை சேர்ந்த 25 வயது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.