ஈரானுக்கு எதிரான தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்குமாறு சவுதி வலியுறுத்தல்..!

0

அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை உருவாக்குவதற்கான ஈரானின் முயற்சிகளுக்கு எதிரான ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்குமாறு சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.


ஈரானின் பிராந்திய திட்டங்களின் ஆபத்துகள், ஏனைய நாடுகளில் அதன் தலையீடு, பயங்கரவாதத்தை வளர்ப்பது, குறுங்குழுவாத அச்சுறுத்தல்களை தூண்டுதல் போன்றவற்றின் காரணமாக ஈரானுக்கு எதிரான சர்வதேச சமூகத்திடமிருந்து ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை கோருவதாகவும் அவர் கூறினார்.

அவரின் கருத்துக்களுக்கு ஈரான் உடனடியாக பதில் எதையும் தெரிவிக்காத நிலையில், தெஹ்ரான் முன்னதாக ஒரு அறிக்கையில் சவுதி அரேபியாவின் எம் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று கூறியிருந்தது.


சவுதி அரேபியாவின் செய்த் நிறுவனமான SPA வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் மன்னரின் உரையின் முழுப் பிரதியையும் வெளியிட்டுள்ளதுடன், நியோமில் உள்ள அவரது அரண்மனையிலிருந்து வீடியோலிங்க் மூலம் சபை உறுப்பினர்கள் முன் உரையாற்றிய மன்னரின் புகைப்படங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்மப் 2018 ஆம் ஆண்டில் உலக வல்லரசுகளுடனான ஒரு முக்கிய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றி இஸ்லாமிய (ஈரான்) குடியரசு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்ததில் இருந்து இப்பகுதியில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.