ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மூவர் பொலிசாரால் கைது..!

0

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை, வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்கத் தொலைபேசியையும் பறித்து சென்றது.


குறித்த வன்முறைக் கும்பல் நேற்றைய தினம் புதன் கிழமை ஊடகவியலாளரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் , தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.