அம்பாந்தோட்டை சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீரென உயிரிழப்பு..!

0

அம்பாந்தோட்டை, அங்குனுகொல பெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

சிறைக் கைதிகள் இடையே கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம் பெற்றது.


சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 28 வயது இளைஞனே மேற்படி மரணித்த நிலையில், சடலம் பி.சி.ஆர் உட்பட மேலதிக விசாரணை மற்றும் பரிசோதனைக்காக அங்குனுகொலபெலஸ்ஸ வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவரது மரணத்திற்கு காரணம் இதுவரை வெளியாகவில்லை.