கொரோனாவால் மற்றுமொருவர் பலி; 15ம் திகதி வரை மேல் மாகாணத்திற்குள் நுழையத் தடை..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருதானையை சேர்ந்த சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இது 45 ஆவது கொரோனா மரணமாகும் .


இதேவேளை இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு வரை மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியேறவோ, மேல் மாகாணத்திற்குள் உள்வரவோ தடை விதிக்கப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.


அத்துடன் இன்று நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலிருந்து ரயில்கள் வெளி மாகாணங்களுக்கு செல்லாதென ரயில்வே அறிவித்துள்ளது.