யாழில் பிரபல வர்த்தகரின் மகள்(18) வர்த்தகரின் நண்பருடன்(39) ஓட்டம்..!

0

யாழில் வர்த்தக நிறுவனம் ஒன்றின் உரிமையாளரின் மகளான பிரபல தனியார் பெண்கள் பாடசாலை மாணவி வர்த்தகரின் நெருங்கிய நண்பனும் பண்ணை ஒன்றின் முதலாளியுமான 39 வயது குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ளார்.


இச் சம்பவத்தையடுத்து மாணவியின் தாய் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட தாய் மற்றும் தாயின் உறவுகள் முயன்ற போது வர்த்தகர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் தனது நண்பனும், தனது மகளாகிய மாணவியின் 39 வயதுக் காதலனுடன் தனது ஏனைய நண்பர்களை வைத்து பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக அறிய வருகின்றது.


குறித்த காதலனுக்கு ஏற்கனவே திருமணமாக 2 குழந்தைகள் உள்ளதாகவும் பெண்களுடன் சிக்கல் உள்ளவர் என்பதை அறிந்த மனைவி அவனை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் தெரிய வருகின்றது.


மாணவியின் தந்தையான வர்த்தகரும் மாணவியின் காதலனான வர்த்தகரின் நண்பரும் நெருங்கிய சினேகிதர்கள் என்பதுடன் பளைப் பகுதியில் உள்ள பண்ணைக்கு உல்லாசத்திற்காக சென்று வருபவர்கள் என  தகவல்கள் கசிந்துள்ளன.