கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32 பேர் பலி; 4,060 பேர் பாதிப்பு..!

0

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில், நான்காயிரத்து 60பேர் பாதிக்கப்பட்டதோடு, 32பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இரண்டு இலட்சத்து 64ஆயிரத்து 113பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்து 522பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும், 38ஆயிரத்து 586பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 238பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன் இரண்டு இலட்சத்து 15ஆயிரத்து 005பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.