கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 36ஆக உயர்வு..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இதன்படி கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.


கந்தானை பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.


இதேவேளை கந்தானை மற்றும் மஹாபாகே பொலிஸ் பிரிவுகள் உடனடியாக அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .