இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் 19 தொற்றினால் 491 பேர் உயிரிழந்தனர். இந்த காலப் பகுதியில் 46 ஆயிரத்து 661 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, இந்தியாவில் இதுவரையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 85 இலட்சத்து 53 ஆயிரத்து 864 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மாத்திரம் இதுவரையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 653 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, உலகளாவிய ரீதியாக மொத்தமாக இதுவரையில் 5 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்து 131 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 3 கோடியே 57 லட்சத்து 79 ஆயிரத்து 761 பேர் குணமடைந்துள்ளனர். 12 லடசத்து 61 ஆயிரத்து 657 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.