வவுனியாவில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்து; பல மில்லியன் ரூபாய் நாசம்..!

0

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கடையொன்று தீப்பற்றியதில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று (திங்கள்) அதிகாலை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இரும்பகம் ஒன்றே இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

இன்று அதிகாலை வீதியால் சென்றவர்கள் கடைக்கு மேலாக புகை வருவதை அவதானித்து அருகில் சென்று பார்த்த போது கடைக்குள்ளே தீப்பற்றுவதை அவதானித்து அத்தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.

இருப்பினும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலையில் செட்டிகுளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தி இருந்தனர்.


சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிசார் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு தெரிவித்துள்ளனர்.

அவ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொன்டு வந்தனர்.


இருப்பினும் குறித்த வியாபார நிலையத்திற்குள் இருந்த சுமார் 80 இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

தீப்பற்றலுக்கான காரணம் மின்சார ஒழுக்கு என குறித்த வர்த்தகர் தெரிவித்தார்.


மேலும் குறித்த தீ அனர்த்தம் தொடர்பான மேலதிக விசாரனைகளை செட்டிக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.