கிராம அலுவலர் கொலையின் பின்னணியில் சக அலுவலரா??? வெளிவரும் பகீர் தகவல்கள்

0

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இலுப்பைக் கடவையில் இருந்து ஆத்திமோட்டை செல்லும் பாதையில் கடந்த 3ஆம் திகதி மாலை 7 மணியளவில் பயணித்த கிராம சேவகர் இனந் தெரியாத நபர் ஒருவரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


இந் நிலையில், பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இறந்த கிராம சேவகருடன் கூடப் பணியாற்றும் பெண் கிராம சேவகரின் கணவர் எனவும், இவர்களுக்கிடையில் கொடுக்கல் – வாங்கல் பிரச்சினை இருந்து எனவும் தெரிய வந்துள்ளது.