கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது நபருக்கு கொரோனா தொற்று..!

0

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட 337 பேரின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதன்படி கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக யாழ் வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.


தொற்றுக்குள்ளான நபர் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர் என்றும், தற்போது திருமணம் செய்து ஜெயபுரத்தில் இருந்தாலும் தொழில் வாய்ப்பு நிமித்தமாக அவர் கொழும்பில் தங்கி இருப்பவர் எனவும் கூறப்படுகின்றது.


கடந்த மாதம் 25ம் திகதியன்று ஜெயபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்த நிலையில், அவர் வீடு திரும்பிய நாளில் இருந்து வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.


இதேவேளை ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் யாழ் வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.