மயூரனின் மாநகர சபை உறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்திற்கு இடைக் காலத் தடை நீடிப்பு..!

0

மகேந்திரன் மயூரனின் யாழ். மாநகர சபை உறுப்புரிமையை நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் காலத் தடையை யாழ். மாவட்ட நீதிமன்றம் மேலும் இரண்டு வார காலத்திற்கு நீடித்துள்ளது.


யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரர் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையானார்.

பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான ந.காண்டீபன், க.சுகாஷ் ஆகியோர் முன்னிலையாகினர்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை வழக்கை ஒத்தி வைத்தது.


எதிர்வரும் 20 ஆம் திகதி எழுத்து மூல சமர்ப்பணத்தை இரு தரப்பினரும் முன்வைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.