கொழும்பில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று..!

0

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அடையாளங் காணப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் பழகியவர்களில், முதலாம் கட்டத்தினருக்கே தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.


முகத்துவாரம் பகுதியில் நேற்று (06) முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையில் இவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.


இன்றைய தினத்தில் கொழும்பு நகரில் 400 PCR பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக ருவன் விஜேமுனி மேலும் குறிப்பிட்டார்.