வவுனியா வடக்கு வலயத்தில் இடம் பெற்ற பெரும் ஊழல் மோசடி பணிப்பாளரால் கண்டுபிடிப்பு..!

0

வவுனியா வடக்கு வலயத்தில் இடம் பெற்ற பெரும் ஊழல் மோசடி வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் அவர்களால் கண்டு பிடிக்கப்பட்டு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாகாண கல்வி திணைக்களம் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளது.


வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நிதிப்பிரிவில் கடமையாற்றிய சிலர் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் கணக்காளர், நிதி உதவியாளர்(FA), வலய கணக்கு கிளை ஊழியர்கள் இணைந்து மேற்கொண்ட கணக்காய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர் கடந்த பல மாதங்களாக 8 ஆசிரியர்களின் பெயரில் மோசடியாக சம்பளப் பணத்தை பெற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதையடுத்து மாகாண கல்வி திணைக்களம், மாகாண கணக்காய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் இணைந்து விசாரணைகளை தொடங்கியுள்ளது.


இதேவேளை என்ற எழுத்தில் பெயரை கொண்ட குறித்த சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதுடன் குறித்த நபரை தேடும் பணியை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த நபர் தேசிய கட்சி ஒன்றின் தீவிர செயற்பாட்டாளர் என்பதுடன் அண்மையிலேயே இடமாற்றம் பெற்று சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.