வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் மாபெரும் நிதி மோசடி அம்பலம்..!

0

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற பெரும் ஊழல் மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து மாகாண கல்வி திணைக்களம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நிதிப்பிரிவில் கடமையாற்றிய சிலர் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக, மாகாண கணக்காய்வு குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக 8 ஆசிரியர்களின் பெயரில் மோசடியாக சம்பளப் பணத்தை பெற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் 1 கோடி, 60 இலட்சம் ரூபா பணம் மோசடியாக பெறப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாகாண கல்வி திணைக்களம் விசாரணைகளை தொடங்கியுள்ளது. இதேவேளை இது தொடர்பில் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் ஜனாதிபதி உடன் தலையிட்டு குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அரச பணியிலிருந்தும் உடன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதனூடாகவே இவ்வாறான திருட்டுக்களை தடுத்து நிறுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.