இன்றைய(3) பாராளுமன்ற அமர்வில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை..!

0

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று(03) இரண்டு மணி நேரம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய விதிமுறைகளை முன்வைப்பார். வேறு நடவடிக்கைகள் இடம் பெறாது எனவும் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே நடவடிக்கைகள் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையே சபை அமர்வு இடம் பெறும்.


இதேவேளை, பாராளுமன்ற வரலாற்றில் அமர்வுகளின் போது முதல் முறையாக இன்று செய்தி சேகரிப்புக்காக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.