இந்தியத் தூதர் – சம்பந்தன் திடீர் சந்திப்பின் எதிரொலி; சம்பந்தர் தனிமைப்படுத்தலில்???

0

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கடந்த 29ம் திகதி மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இந்தியத் தூதுவரின் கொழும்பிலுள்ள உத்தியோக பூர்வ இல்லமான இந்தியன் ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.


இதன்போது இலங்கை – இந்திய இரு நாட்டு உறவுகள், சமகால அரசியல் நிலைவரங்கள், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்கள் உட்படப் பல தரப்பட்ட விடயங்கள் குறித்து இருவரும் பேசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை குறித்த தூதரக பணியாள் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் அவர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவாரா? அல்லது சட்டம் பாமர மக்களுக்கு மட்டும்தானா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.