இலங்கையில் கொரோனாவின் 21 ஆவது உயிரிழப்பு பதிவானது..!

0

நபரொருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்த நிலையில், அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை கம்பஹா ஆதார வைத்திய சாலையில் நடத்தப்பட்ட போது, குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருந்தமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக கம்பஹா மாநகர முதல்வர் எரங்க சேனாநாயக்க தெரிவித்தார்.


மஹர பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். இத்துடன் கொரோனாவால் 21 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.