வவுனியாவில் பூசை வழிபாடு நடத்திய பூசகர் உட்பட்ட 15 பேர் தனிமைப்படுத்தலில்..!

0

வவுனியா – புளியங்குளம் பழையவாடி கிராமத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கோவில் பூசை நடத்திய பூசகர் உட்பட 15 பேர் நேற்று மதியம் கைது செய்யப்பட்டனர்.

அங்குள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் குறித்த பூசை வழிபாடுகள் இடம் பெற்றிருக்கின்றது. குறித்த பூசையில் வெளி மாவட்டத்தவர்கள் கலந்து கொண்டதுடன், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.