மின்னல் தாக்கி கணவனும், மனைவியும் பலி; அம்பாறையில் சோகம்..!

0

அம்பாறை, திருக்கோவில் பிரதேச வினாயக புரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

வினாயக புரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.


இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப் பயந்து ஓடி வருகையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்