நாட்டில் இதுவரை 10,000க்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

இன்றைய தினம் இதுவரை கண்டறியப்பட்ட 314 நோயாளர்களுடன் இதுவரை மொத்தமாக 10 ஆயிரத்து 105 பேர் கொரோனா வைரஸுடன் அடையாளம் காணப்பட்டனர்.


இவர்களில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4282 ஆகும். 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5804 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வைத்திய சாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் 9 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


அவர்களுடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இதர சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது