பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழப்பு..!

0

பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் திடீர் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அவர், கிரிபத்கொட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் 51 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.