கொரோனா எதிரொலி; அரச ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!

0

அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப் படுத்துமாறு அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களில் உள்ள அரச நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.