மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி..!

0

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே முக்கிய நோக்கம் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவிக்கையில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் மின்சாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு பராமரிப்பு சபை தயாராக இருப்பதாகவும் கூறினார்.


இந்த குழு 24 மணித்தியாலயமும் செயல்படும். நாடு எதிர் கொண்டுள்ள அனர்த்த நிலைமையில் எமக்கும் பொறுப்புக்கள் உண்டு. மின்சார சபை ஊழியர்கள் மின் உற்பத்தி நிலையங்களில் 24 மணித்தியால கடமையில் ஈடுப்பட்டுள்ளனர். மின் துண்டிப்புக்களை சீர்ப்படுத்துவதற்கும் பராமரிப்பு குழுவினார் செயல்படுகின்றனர்.


ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்திலும் கவனம் செலுத்தியுள்ளோம். மின்சார துண்டிப்பு, மின்சார பிரச்சினைகள் தொடர்பில் 1988 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குவதன் மூலம் குழுவினர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.