முல்லைத்தீவு கரைத்துறைப் பற்றுக்குள் வெளி மாவட்டத்தவர் வருவது தடை???

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்த வீதியோர வியாரிகளின் வியாபார நடவடிக்கையினை தடை செய்துள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தெரிவித்துள்ளார்.

நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கரைதுறைப் பற்று பிரதேச சபை எல்லைக்குள் நோய் தொற்று தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தொற்றினை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன் படி வெளிமாவட்டங்களில் இருந்து வர்த்தக நோக்கத்துடனோ ஏனைய நோக்கத்துடனோ யாரும் வருவது தடை செய்யப்பட வேண்டும். முன்னர் கொரோனா பரவிய போது இருந்த முன்னாயத்தங்கள் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்லாததை அவதானிக்க முடிகின்றது என்றும் குறிப்பிட்டார்.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து வீதியோர வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.


வெளிமாவட்டத்தினை சேர்ந்த பலர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கின்றார்கள் எனவே ஆபத்தான கொரோனா தொற்றில் இருந்து மக்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டிய முன்னாயத்த வேலைகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.