இன்று காலை வரை 541 பேர் கொரோனாவால் பாதிப்பு; 50,000கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில்..!

0

இலங்கையில் இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் 541 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தைத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.


இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 413ஆக உயர்வடைந்துள்ளது.


அவர்களில் 4 ஆயிரத்து 464 தொற்றாளர்கள் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் சிகிச்சைகளின் போது உயிரிழந்துள்ளனர்.


இதேவேளை இதுவரை சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.