கொழும்பிலிருந்து வந்த பெண்ணுடன் விபச்சாரம்; யாழில் மூன்று இளைஞர்கள் தனிமைப்படுத்தலில்..!

0

கொழும்பிலிருந்து யாழ் வந்து விபச்சாரச் செயற்பாட்டில் ஈடுபட்ட பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பிலிருந்த இளைஞர்கள் மூவர் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


கொழும்பிலிருந்து வந்த பெண் இளவாலை பகுதியில் சமூக விரோதச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் குறித்த பெண்ணை யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்த்திருக்கின்றனர்.


அதன் பின்னர் குறித்த பெண்ணுடன் தவறான தொடர்பிலிருந்த இளவாலை, சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவரை பிடித்து கட்டாய தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருப்பதாக இளவாலை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.