வவுனியாவில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு கடும் எச்சரிக்கை..!

0

இலங்கையில் தற்போது கொவிட் – 19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக முகக் கவசம் அணியாது பயணிப்பவர்களை தடுத்து நிறுத்தி கடும் எச்சரிக்கையின் பின் வவுனியா பொலிஸார் விடுவித்து வருகின்றனர்.

இலங்கையில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணியுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் பொரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் உத்தரவினை பொருட்படுத்தாது முகக் கவசம் அணியாது பயணித்து வருகின்றனர்.


இதனையடுத்து வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி.குருசிங்க தலைமையிலான பொலிஸார் வவுனியா பழைய பேருந்து நிலையம் மற்றும் வவுனியா நகரப் பகுதிகளில் முகக்கவசம் அணியாது செல்பவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை பதிவு செய்து கடும் எச்சரிக்கையின் பின் விடுவித்துள்ளனர்.


இவ்வாறு முகக்கவசம் அணியாது செல்பவர்களை எச்சரிப்பது மாத்திரம் அல்லாது அவர்களது வாகனத்தினை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு முகக்கவசத்தை வாங்கி அணிந்து விட்டு வாகனத்தினை எடுத்துச் செல்லுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


கொவிட்- 19 பரம்பலைக் கடுப்படுத்த பொலிஸார் எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது வவுனியா மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.