நாடு முழுவதுமாக முடக்கப்படலாம்; பிரதமர் மஹிந்த தெரிவிப்பு..!

0

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சிலவேளை முழு நாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போதே, பிரதமர் மகிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான முதலீடுகள், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், கொவிட்-19க்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.