வவுனியா நெடுங்கேணி கொரோனா நோயாளிகள் பயணித்த பேருந்து விபரங்கள் வெளியாகியது..!

0

வவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவுக்கு சேவையில் ஈடுபட்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை வவுனியா வடக்கிற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணி பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந் நிலையில் அவர்களில் சிலர் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் வவுனியாவில் இருந்து நெடுங்கேணி ஊடாக முல்லைத்தீவு செல்லும் பேரூந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


எனவே குறித்த திகதிகளில் காலை 5 மணியில் இருந்து காலை 10 மணிவரையான காலப்பகுதியில் நெடுங்கேணியூடாக முல்லைத்தீவு வழித்தடத்தில் பயணம் மேற்கொண்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உடனடியாக பொதுசுகாதார பரிசோதகர்களை தொடர்புகொண்டு தமக்கான பி.சி.ஆர். பரிசோனைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


அத்துடன் அவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த திகதிகளில் அப் பேரூந்துகளில் பயணம் செய்த பயணிகளும் தமது பகுதி சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு வவுனியா பொதுச் சுகாதார பரிசோதகர் கோரிக்கை விடுத்துள்ளனர்.