கொழும்பிற்குள் வரும் தூரப் பகுதி பஸ் சேவைகள் இடைநிறுத்தம்..!

0

கொழும்புக்குள் வரும் தூரப் பகுதி பஸ் சேவைகளை இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பஸ்கள் இவாறு சேவைகளில் ஈடுபட மாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி மூடப்பட்டது.

அதன் பணியாளர்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற பாதுகாப்புக்காக சேவையில் அமர்த்தப்பட்ட விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.


நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி முற்றாக கிருமி நீக்கம் செய்யப்படவுள்ளது. விசேட அதிரடிப்படையின் வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீண்டும் 28 ஆம் திகதி நாடாளுமன்றம் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.